விஜய் என்ட்ரி சீன் செம - 'சர்கார்' படத்தின் முதல் விமர்சனம் துபாயில் இருந்து!


மாஸ் தளபதி விஜய் நடித்துள்ள #சர்கார் திரைப்படம் நாளை தமிழகத்தில் வெளியாகிறது, இதனால் தளபதி  ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளனர். பேனர்கள், போஸ்டர்களால் உலகமெங்கும் #சர்கார் பற்றிய பரபரப்பை ரசிகர்கள் ஏற்படுத்தி உள்ளார்கள்.



இந்நிலையில் UAE சென்சார் போர்டில் இருக்கும் யுமைர் செந்த் என்பவர் சர்கார் படத்தை பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை ட்விட்டரில் பதிவிட்டு பிரபலப்படுத்தி உள்ளார்..


 அவர் கூறுகையில், "சர்கார் படத்தின் முதல் பாதி செம்ம மாஸ். விஜய் என்ட்ரி சீன் செம  I am a Corporate Criminal ! -  என்கிற வசனம் தெறிக்கவிடுகிறது சண்டைக்காட்சிகள், பன்ச் வசனங்கள் சிறப்பாக உள்ளது மற்றும் ஏ.ஆர். ரகுமான் சிறப்பாக இசையமைத்துள்ளார். முருகதாஸ் சூப்பர் படத்தை கொடுத்துள்ளார். நிச்சயமாக சர்கார் படத்தை பார்க்கலாம் என்று கூறியுள்ளார். கொஞ்சம் மசாலா காட்சிகள் அதிகம் இருந்தாலும்,தளபதி விஜய் வைத்து படத்தில் நல்ல கருத்தை சொல்லி இருக்கிறார்கள்" என்று பதிவிட்டு உள்ளார். சிறப்பான செய்தி.

பொறுத்தது போதும் . நாளை ரசிகர்களால் பொங்கி வழியட்டும் தியேட்டர்கள் .
விஜய் என்ட்ரி சீன் செம - 'சர்கார்' படத்தின் முதல் விமர்சனம் துபாயில் இருந்து! விஜய் என்ட்ரி சீன் செம -  'சர்கார்' படத்தின் முதல் விமர்சனம் துபாயில் இருந்து! Reviewed by Vaigai Tamil on November 05, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.