சிவக்குமார் தள்ளிவிட்ட ஓசி செல்போனின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? கதறும் இளைஞன்!.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்ட தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழாவிற்கு சிவக்குமார் சென்றிருந்தார்.
நடிகர் சிவக்குமார் அந்த நிகழ்ச்சியின் போது தள்ளிவிட்ட செல்போனின் மதிப்பு 19 ஆயிரம் ரூபாய் எனவும், அது என்னது கூட இல்லை என்று பாதிக்கப்பட்ட வாலிபர் வேதனையுடன் கூறியுள்ளார்.
இந்த விழாவில் நடிகர் சிவக்குமார் மற்றும் அமைச்சர் ஆர் பி உதயகுமாரும் கலந்து கொண்டனர். அப்போது திறப்பு விழா இடத்துக்கு வந்த சிவக்குமாரை காண ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டு இருந்தனர்.
அவர்களில் ஒரு இளைஞர் சிவக்குமார் வந்து கொண்டிருக்கும் போது தனது செல்போனில் செல்பி எடுக்க முயன்றார். இதை பார்த்து ஆத்திரமடைந்த சிவகுமார் யாரும் எதிர்பாராத வேளையில் அந்த இளைஞனின் போனை தட்டி விட்டார்.
அது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவரும் வேளையில் ,சிவக்குமார் அப்படி நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில் அந்த வாலிபர் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், 19 ஆயிரம் ரூபாய் செல்போன் போய்விட்டது, அது என் செல்போன் கூட இல்ல என் அண்ண செல்போன் என தெரிவித்தார்
அமைச்சர் உதயகுமாருடன் செல்பி எடுத்தபோது கூட அவர் எதுவும் சொல்ல வில்லை. ஆனால் நடிகர் சிவகுமார் தான் இப்படி கோபப்பட்டு தட்டி விட்டு விட்டார் என மன வேதனையுடன் கூறியுள்ளார்.
ஒரு செல்பிக்கு இவ்ளோ அக்கபோரா..
#sivakumarselfie,
சிவக்குமார் தள்ளிவிட்ட ஓசி செல்போனின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? கதறும் இளைஞன்!.
Reviewed by Vaigai Tamil
on
November 02, 2018
Rating:
Reviewed by Vaigai Tamil
on
November 02, 2018
Rating:



No comments: