2.O படம் எப்படி இருக்கு தெரியுமா ?


தற்போது உலக அளவில் ஹாலிவுட் படங்களுக்கு என இருக்கும் பெருமை சிறப்பானது. அந்த படங்களின் தரத்திற்கும், தொழில்நுட்பத்திற்கும் அருகில் கூட நம்மால் நெருங்க முடியாது என்று சொல்வார்கள். ஆனால், அப்படிப்பட்ட ஹாலிவுட்டிற்கே சவால் விடும் இயக்குனர்கள் நம் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள் என்பதை  நாமும் பெருமைப்பட்டு சொல்லலாம் இனிமேல்.

இயக்குனர்: சங்கர்
நடிப்பு - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன்
இசை - ஏஆர் ரகுமான்
தயாரிப்பு - லைகா புரொடக்ஷன்ஸ்
ரேட்டிங் - 4.1/5


படத்தின் கதை:

செல்போன்களை அதிகம் பயன்படுத்துவதால் பறவை இனங்களுக்கு பாதிப்பு வருகிறது என பறவையியல் வல்லுனர் ஆன அக்ஷய்குமார், செல்போன் கம்பெனிகளுக்கு குறைவான அனுமதி கொடுக்க வேண்டும் என்றும், அலைவரிசையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கிறார். ஆனால், அரசு அதை ஏற்க மறுக்கிறது. நீதிமன்றத்தை நாடி அங்கும் தோற்றுப் போகிறார். இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார். அதன்பின் ஆவியாக வந்து பறவைகளின் சக்தியுடன் பறவை மனிதனாக மாறி மக்கள் பயன்படுத்தும் செல்போன்களை காணாமல் போகச் செய்கிறார். தன்னை எதிர்த்தவர்களையும் கொலை செய்கிறார். இந்த நிலையில் அது பற்றி கண்டுபிடிக்க அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி ரோபோ விஞ்ஞானி நமது ரஜினிகாந்த், சிட்டி ரோபோ 2.0 வெர்ஷனை உருவாக்குகிறார். சிட்டி, பறவை மனிதனை அழித்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.


உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல, மற்ற உயிரினங்களுக்கும் சேர்த்துதான் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல கருத்தை நாமும் உணரும்படியான படம்தான் 2.O

ஷங்கர் தற்போது வரை இயக்கிய படங்களைப் பார்த்தே இந்தியத் திரையுலகம் மிரண்டிருக்கிறது. இப்போது இந்த 2.0 படத்தைப் பார்த்த பிறகு இன்னும் அதிசயத்துப் போகலாம்.


விஞ்ஞானி வசீகரன், சிட்டி 2.0 வெர்ஷன் என ரஜினிகாந்த். வழக்கம் போலவே அவருடைய தனித்தன்மை  நடிப்பில் நம்மை ஈர்க்கிறார். அவர்களை விட கிளைமாக்சில் கொஞ்ச நேரம் வரும் 'கம்ப்ரெஸ்டு வெர்ஷன் 3.0' தனி ஸ்டைலில் அசத்துகிறது. அடுத்து 3.0 எடுப்பதற்கு இப்போதே இயக்குனர் ஷங்கர் கதையைத் தயார் செய்துவிட்டார் போல.

ரஜினியின் உதவியாளராக நிலா என்கிற ரோபோட் ஆக எமி ஜாக்சன். ஏற்கெனவே பார்ப்பதற்கு பொம்மை மாதிரி இருப்பார். இந்தப் படத்தில் நிஜ ரேபோட் ஆகவே மாறிவிட்டார் சங்கர்.

படத்தின் வில்லன் என அக்ஷய்குமாரைச் சொல்ல முடியாது. ஏனெனில் வெட்டிப் பேச்சுக்கெல்லாம் அடிக்கடி செல்போனைப் பயன்படுத்தும் நாம்தான் வில்லன்கள். செல்போன் பயன்பாட்டைக் குறையுங்கள், பறவைகளையும் வாழவிடுங்கள் என்ற நல்லெண்ணத்துடன் போராடுகிறார் வில்லன் அக்ஷய்குமார். பிளாஷ்பேக்கில் வயதான பறவையியல் வல்லுனராக உருக வைக்கிறார். பின்னர், பறவை மனிதனாக  மாறி தன் நடிப்பில் நம்மை அதிர வைக்கிறார்.

வசீகரனை எதிர்க்கும் சுதன்ஷு பான்டே, அமைச்சர் கலாபவன் ஷாஜோன் ஆகியோர் மற்ற கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.


ஏஆர் ரகுமான் பின்னணி இசையில் படத்தில் 'புல்லினங்காள்' பாடல் மட்டுமே கொஞ்ச நேரம் வருகிறது. 'எந்திர லோகத்து' பாடலை படம் முடிந்த பின் சேர்த்திருக்கிறார்கள். படம் அதோடு முடிந்தது என எழுந்துவிடாதீர்கள். அதன்பின் ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது.

குறிப்பாக VFX வேலையைச் செய்தவர்கள் ஒரு தமிழ்ப் படத்தை ஹாலிவுட்டை மிஞ்சும் அளவிற்குக் கொடுத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தை குறை கூறாமல், ஒரு தமிழ்ப் படத்தை உலக அளவில் பேச வைக்கும் படமாகக் கொடுத்தற்கு படக்குழுவினரைத் தாராளமாகப் பாராட்டலாம். இனி, தமிழ் சினிமாவை 2.0 படத்திற்கு முன், பின் எனப் பிரித்துப் பேசலாம்.

 பலமடங்கு பிரமிப்பை 2.ஓ படத்தை குழந்தைகளுடன் பார்த்து ரசிக்கலாம்.

#2.O movie,#rajinikanth2.O,

2.O படம் எப்படி இருக்கு தெரியுமா ? 2.O படம் எப்படி இருக்கு தெரியுமா ? Reviewed by Vaigai Tamil on November 29, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.