ராட்சசன் - படம் எப்படி இருக்கு தெரியுமா ?

ராட்சசன் - விமர்சனம் 


ராட்சசன் : சைக்கோ கொலையாளியைப் பிடிக்க போராடும் ஈகோ போலீஸ் .

நடிகர்கள்: விஷ்ணு விஷால்,அமலாபால்,முனிஸ்,ராதாரவி,நிழல்கள் ரவி,காளி வெங்கட்,வினோதினி,சூசன் ஜார்ஜ்.

கதை : 

   உதவி இயக்குநராக இருக்கும் விஷ்ணு இயக்குநர் ஆக வேண்டும் என்று  முயற்சி செய்து வருகிறார். அதற்காக சைக்கோ திரில்லர் கதையொன்றை எழுதி வைத்துக் கொண்டு தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி வருகிறார். ஆனால் அவரது இயக்குநர் ஆசை கனவாகவே இருக்கிறது. இதற்கிடையில் தனது அம்மா மற்றும் போலீஸ் அதிகாரியாக இருக்கும் தனது மாமாவின் தொடர் வற்புறுத்தலால் போலீஸ் வேலையில் சேர்கிறார்.

விஷ்ணு பணியில் சேர்ந்த சில நாட்களில் பள்ளி மாணவி ஒருவர் கடத்திக் கொலை செய்யப்படுகிறார். இதற்கான தடயங்களை சேகரிக்கும் விஷ்ணு மறுபுறம் ஆசிரியையாக இருக்கும் அமலா பாலுடன் காதல் வயப்படுகிறார். இதுகுறித்த விசாரணையில் இறங்கும் விஷ்ணுவுக்கு அடுத்தடுத்து சிறுமிகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. ஒருகட்டத்தில் அவரது அக்கா மகள் கடத்தப்படுகிறார்.


இதற்கிடையில் இந்த வழக்கில் ஏற்படும் ஒரு முக்கிய பிரச்சினையின் காரணமாக விஷ்ணு சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். பள்ளி சிறுமிகளை கடத்திக் கொலை செய்யும் அந்த ராட்சசனை விஷ்ணு கண்டுபிடித்தாரா?அவரது அக்கா மகள் காப்பாற்றப்பட்டாரா? கொலையாளி எதற்காக இப்படி செய்கிறார்? அவரை விஷ்ணுவால் நெருங்க முடிந்ததா?போன்ற பல்வேறு கேள்விகளுக்கான ஒரு தொடரே'ராட்சசன்'.

நடிகர்கள் பற்றி : 

விஸ்ணு விஷால் : படத்தில் லட்சியம் நிரம்பிய உதவி இயக்குனராகவும், கூடவே கடமை தவறாத போலீஸ் சப் இன்ஸாகவும் புகுந்து விளையாடி இருக்கிறார். இந்த படத்திற்காக விஷ்ணு கடுமையாக உழைத்திருக்கிறார்... என்பதை ஒவ்வொரு சீனிலும்  பார்க்கலாம் . அருமை .

அமலாபால்:  குடும்ப பெண்ணாக , அதிகம் கிளாமர் இல்லை என்றாலும், அடக்க ஒடுக்கமான டீச்சராக ரசிகர்களை ஈர்க்கிறார். 

இசையமைப்பாளர்ஜிப்ரான், பின்னணி இசையின் மூலமே ஒரு மாதிரி பயம் உண்டு பண்ணியிருக்கிறார், என்பதும், வில்லன் யார்? அவன் எப்படி இருப்பான்.? என்பதை ஒரு குறிப்பிட்ட சீன்கள் வரை துளியும் இயக்குனர்காட்டாவிட்டாலும், இசையாலேயே அந்த ராட்சசனை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்.என்பதும் இப்படத்தின் பெரும் பலம் ஆகும். 



படத்தை பற்றி என் கருத்து:

முழு நீள சைக்கோ த்ரில்லர் கதையை முயற்சித்திருக்கும் இயக்குநர் ராம்குமாருக்கு ரொம்பவே துணிச்சல்! அதற்காக அவரை பாராட்டலாம் .

படத்தின் முதல் பாதி போவதே தெரியாத வகையில் நகர்கிறது.ஆனால்  இரண்டாவது பாதி அதற்கு நேர்மாறாக எப்போது முடியும்? என்று யோசிக்க வைக்கிறது என்பது பலவீனம். இரண்டாவது பாதியில் சில காட்சிகளை குறைத்திருந்தால்  படம் மேலும் சிறப்பாக வந்திருக்கும் என்பது என்  எண்ணம் மட்டுமல்ல உண்மையும்  கூட! 

அதிலும், குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் வில்லனை நெருங்கிய பிறகும் அந்த அகோர முக வில்லனுடன் அக்காட்சிகள சீட்டு கட்டு மேஜிக் காட்சிகள், போக்கு காட்டும் சீன்கள்.என நீள்வதும், திரும்ப திரும்ப அந்த கிப்ட் பாக்ஸ் பொம்மைகள் காட்டப்படுவதும், இளம் மாணவிகளின் கொடூர கொலை செய்யப்பட்ட பொட்டலங்கள் காட்டப்படுவதும் ரசிகனுக்கு அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

அதே மாதிரி, படத்தில் சைக்கோ கொலையாளியின் கொடூரமான முகத்தையும், தோற்றத்தையும் ஒரு கட்டத்திற்கு மேல் பார்க்க முடியவில்லை. என்பது பலவீனம் தான் .

கடைசியாக : த்ரில்லர் பட ரசிகர்கள் கண்டிப்பாக பாக்கலாம் . மற்றபடி ஒரு முறை பார்க்கலாம்.

நன்றி ! புதிய படங்கள் பற்றி தெரிந்து கொள்ள உங்கள் ஈமெயில் ஐ பதிவிடவும்.

Ratchasan Tamil Movie Review 




ராட்சசன் - படம் எப்படி இருக்கு தெரியுமா ? ராட்சசன் - படம் எப்படி இருக்கு தெரியுமா ? Reviewed by Vaigai Tamil on October 06, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.