நோட்டா - படம் எப்படி இருக்கு ?

நோட்டா திரை விமர்சனம்



நடிகர்கள்:விஜய்தேவராகொண்டா,சத்யராஜ்,மெஹ்ரீன்பிரிடா,நாசர்,எம்.எஸ் பாஸ்கர்,கருணாகரன்,யாஷிகா,அனஸ்தஸ்யாமஸ்லோவா,சஞ்சனாநடராஜன்,

இயக்குனர் :  ஆனந்த் சங்கர் 


கதை :
             முதல்வர் நாற்காலியில் பல வருடமாக  இருக்கும் நாசர், தான் பெருசு பெருசாக செய்த ஊழல்களில் எல்லாம் தப்பித்து சிறியதாக செய்த சொகுசு பேருந்து ஊழல் வழக்கால்  சிறை செல்லவேண்டும்  என்பதை தெரிந்து கொண்டு, ஒரு சாமியாரின் சொன்னபடி , லண்டனில் இருந்து இந்தியா திரும்பி , இளம்  வயதிற்கே உரிய ஆட்டம் , பாட்டம் , குடி கும்மாளம் என ஜாலியாகத் திரியும் தன் மகன் விஜய் தேவர கொண்டாவை முதல்வர் ஆக்கிவிட்டு சிறை செல்கிறார் நாசர் .
முதலில் முதல்வர் பதவியில் விருப்பம் இல்லாமல் அந்த பதவியை ஏற்கும் விஜய் தேவர கொண்டா  ,அப்பாவின் தவறுகளை தொடர்ந்து சுட்டி காட்டி வந்த தங்கள் குடும்ப நண்பரும் பத்திரிகையாளருமான சத்யராஜுடனும் , அவரது மகள்மெஹ்ரீன் பிரிஸாடாவுடனும் சேர்ந்து நாட்டை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்ல முயற்சி எடுக்கிறார் .விஜய் தேவார கொண்டாவின்  இந்த முன்னேற்ற முயற்சி நடந்ததா ? சிறை சென்ற நாசர் திரும்பி வந்தாரா ? என்னும் இன்னும் பல கேள்விகளுக்கு  விடையளிக்கும் கதையுடன் , ஆட்சியாளர்களை அடிமைபடுத்தி ஆசிரமம் எனும் பெயரில் 400 ஏக்கரை வளைத்து வைத்திருக்கும் ஹவாலா சாமியார், கூவாத்தூர் எம்எல்ஏக்கள் சிறை வைப்பு , அரசின் மெத்தனம் - சென்னை வெள்ள சேதம் , மாஜி முதல்வரின் மருத்துவமனை மறைப்பு சமாச்சாரங்கள் உள்ளிட்ட சமீபத்தில் நடந்த பாலிடிக்ஸ் மேட்டர்களையும் கலந்து கட்டி "நோட்டா"வை ரசிகனைக் காட்டிலும்அரசியல்வாதிகள்  அதிகம் "நோட்" பண்ணும்படி படம் எடுக்கப்பட்டுள்ளது .

நடிகர்கள் பற்றி :

விஜய் தேவர கொண்டா: இளம் முதல்வர் வருணாக விஜய் தேவர கொண்டா,தெலுங்கு முகம் என்பது தெரியாத அளவிற்கு நடிப்பை  காட்ட முயற்சி எடுத்துள்ளார் . ஆனால் , அவரது முகத்தில் காட்டப்படும் ஆக்ரோஷ எக்ஸ்பிரஸன்கள் அடுத்தடுத்த காட்சிப்படுத்தல்களில் ஆக்ஷன் சீன்களாக வடிக்கப்படாதது ஒவ்வொரு சீனிலும் அப்பட்டமாய் தெரிகிறது. 




அதை விட  முழு நேர அரசியல்வாதி ஆகிட்டீங்க போல என ஒரு காட்சியில் கேட்கும் சத்யராஜிடம் , ஆமாம் பின்னே, கப்பலில் வேலை பார்ப்பவனுக்கு நீச்சலும் தெரியணும் சார் உங்க ப்ரண்டு கிட்ட சொல்லுங்க  என அவர் நடிப்பில்  பதில் அளிக்கும் இடத்திலும் ,தன் கட்சிக்காரர்களால் எரிக்கப் படும் பேருந்தினுள் ஒரு பள்ளிக் குழந்தை சிக்கி இறப்பதை பார்க்க வரும் இடங்களிலும் நம் மனதை  ஈர்க்கிறார்.

கதை நாயகி:  தன் வசீகர அழகால் ரசிகனை வசீகரிக்கிறார். 

பிற நடிகர்கள் : முதல்வர் நாசரின் விசுவாசியாக வரும் எம்.எஸ் பாஸ்கர், விஜய் தேவராவின் நாகரிக  நண்பர் கருணாகரன் , இரண்டே இரண்டு சீனில் குட்டை டிரவுசர் போட்ட "பிக்பாஸ்" யாஷிகா, எதிர்கட்சி இளம் பெண் தலைவி கயல் மற்றும் விஜய்யின் குட்டி தங்கை  முறையே அனஸ்தஸ்யா மஸ்லோவா ,சஞ்சனா நடராஜன் , பிரியதர்ஷி புலிகொண்டா, உள்ளிட்டோருடன் நட்புக்காக ஒரே ஒரு காட்சியில் வரும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்ஆகிய அனைவரின் நடிப்பு சிறப்பு .



படத்தை பற்றி :


விஜய் தேவரகொன்டா தமிழில் அறிமுகமாகும் முதல் படம்,தமிழே தெரியாமல் ஒருத்தர் இவ்வளவு சூப்பராக டப் செய்துள்ளார் என்றால் கண்டிப்பாக பாராட்ட வேண்டிய விஷயம் தான்.தனக்கே உரிய ரவுடி ஸ்டைலில் இன்றைய இளைஞர்களை  கவர்ந்து இழுக்கிறார் விஜய் .


தமிழகத்தில் நடக்கும் அத்தனை பிரச்சனைகளையும் அப்படியே கதையாக மாற்றியுள்ளனர். வாரிசு அரசியல், குனிந்து கும்புடு போடுவது, செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிடுவது, கூவத்தூர் ரிசார்ட் கொண்டாட்டம் என சமீப  அரசியல் நிகழ்வுகளை கண்முன் கொண்டு வந்துள்ளார் இயக்குனர் .

காட்சிகள் அறிந்து கைத்தட்டி ரசிக்கின்றனர் ரசிகர்கள் . அதிலும் குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடுவது எத்தனை சுமூகமாக முடிக்கலாம் என்பதை படத்தில் காட்டிய விதம் சூப்பர் .

ஆனால், இத்தனை இருந்தும் படம் முழுதும் ஏதோ செயற்கை தனம் ஒட்டி வருகின்றது. ஒரு வேளை தெலுங்கு பட ஹீரோ என்பதாலோ அல்லது காட்சியே அப்படியா என்று தெரியவில்லை.

அதை விட பல இடங்களில் அநியாயத்திற்கு லாஜிக் மீறல், அதிலும் பினாமி பணத்தை எடுக்கும் காட்சி எல்லாம் காதில் பூ வாய்த்த கதை தான். கிளைமேக்ஸும் அத்தனை வலுவாக அமையவில்லை.

படத்தின் பல காட்சிகளை தாங்கி பிடிப்பது சாமின் இசை தான், பின்னணியில் மிரட்டியுள்ளார். ஒளிப்பதிவும் செட் என்றாலும் தன்னால் முடிந்த அளவிற்கு யதார்த்தமாக காட்ட முயற்சித்துள்ளனர்,

படம் கொஞ்சம் மொக்கையா தான்  இருக்கு . கொஞ்சம் கவலையோடு படத்திற்கு வாக்களிக்கலாம் .

நன்றி . உங்கள் ஈமெயில் ஐ  பதிவிடவும் அனைத்து திரை பட விமர்சனங்கள் உடனுக்குடன் ..







நோட்டா - படம் எப்படி இருக்கு ? நோட்டா - படம் எப்படி இருக்கு ? Reviewed by Vaigai Tamil on October 05, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.