ரஜினியா இது - கெத்து காட்டும் " பேட்ட " லுக் !


நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் " பேட்ட "படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் சன் பிட்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது .இந்த போஸ்டர் ரஜினி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது .

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும்  "பேட்ட" படத்தில், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, நவாஸுதீன் சித்திக், த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்ட நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது. அனிருத் இசையமைக்க, கார்த்திக் சுப்பராஜ் படத்தை இயக்குகிறார். இந்த படப்பிடிப்பு அதி வேகத்துடன்  பல நகரங்களில் நடந்து வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே சமீபத்தில் சோசியல் மீடியாவில்  வெளியானது. இரண்டாவது லுக் இன்று வெளியிடப்பட்டது. அதில், ரஜினிகாந்த், சிங்கம் சூர்யா போன்ற  கம்பீர மீசையுடன் மிகவும்  இளமையாக காட்சியளிக்கிறார்.


சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த படம் வெளியிடப்பட்டது. வெளியான ஒரு சில நிமிடங்களிலேயே, இந்த போஸ்டர் உலக அளவில்  வைரலானது.  #pettasecondlook  என்ற ஹேஷ்டேக் ட்விட்டர்ல  ட்ரெண்டிங்கும் ஆகி வருகிறது.

ரஜினி  ரசிகர்களை இந்த போஸ்டர் குதூகலப்படுத்தி உள்ளது சிறப்பு ..

நன்றி மக்களே...

ரஜினியா இது - கெத்து காட்டும் " பேட்ட " லுக் ! ரஜினியா இது - கெத்து  காட்டும் " பேட்ட " லுக் ! Reviewed by Vaigai Tamil on October 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.