சர்கார் படத்தின் கதை இப்படிதான் இருக்குமாம்.?




விஜய் நடித்து முடித்துள்ள சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது .சர்க்கார் படத்தில் பணிபுரிந்த டெக்னீஷியன்கள், சில தகவல்களை ரகசியமாக  வெளியிட்டு உள்ளார்கள் அதுபடத்தின் கதை போல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது, படத்தின் கதைப்படி அனைவரும் நினைப்பது போல் விஜய் அரசியல்வாதி அல்ல மாறாக விஜய் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை நடத்தும் முதலாளி  ஆனால் அரசியல்வாதிகளின் வெற்றியையும் தோல்வியையும் நிர்ணயிக்க வைப்பது கார்ப்பரேட் நிறுவனம் தான், இப்படிதான் விஜய் அரசியல்வாதிகளுடன்  கைகோர்க்கிறார் என்கிறது சர்கார் டெக்னிஷியன் குழு.

படத்தின் கதையை சிம்பிளாக சொல்ல வேண்டுமென்றால் உலக அளவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வெற்றியும் இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலில் மோடி வெற்றி பெற்றதும் சர்க்கார் படத்தின் ஆணி வேராக இருக்கிறது கதை. மக்களை எப்படி கார்ப்பரேட் நிறுவனம் இணையதளங்கள்  மூலம் மூளை சலவை செய்கிறார்கள் என்பதை விவரிக்கும் படமே சர்க்கார்.



படத்தின் முதல் பாதியில் ஒரு மோசமான அரசியல்வாதியை தனது கார்ப்பரேட் நிறுவனத்தின் மூலம் முதல்வராக்குகிறார விஜய் , இரண்டாவது பாதியில் அவரை எப்படி மண்ணைக்கவ்வ வைக்கிறார் என்பதுதான் சர்கார் கதை. 

படத்திற்கு இடையில் யோகி பாபுவின் காமெடியும், கீர்த்தி சுரேஷ் விஜயின் காதல் கா ட்சிகளும் இருக்கும், சர்கார் படத்தை முதலில் இந்தியத் திரைப்படமாக தான் எடுக்க நினைத்து இருக்கிறார் இயக்குனர் முருகதாஸ் ஆனால் தமிழக மக்களிடம் நெருக்கமாக கதை இருக்க வேண்டும் என்பது விஜயின் கோரிக்கை, அதனால் அரசியல்வாதி ஒருவரைப் ப்ரொமோட் செய்ய விஜய் அமெரிக்காவில் இருந்து வேலை செய்வதாக கதை மாற்றப்பட்டுள்ளது, படத்தின் ரிலீசுக்கு பிறகு, மெர்சல் படத்தில் பிரச்சனை செய்த அரசியல் தலைவர்கள் இந்தப் படத்துக்கும் பிரச்சினை செய்யலாம் போல .

நன்றி மக்களே..

#sarkar ,#sarkarstory ,#sarkarmovie 
சர்கார் படத்தின் கதை இப்படிதான் இருக்குமாம்.? சர்கார் படத்தின் கதை  இப்படிதான் இருக்குமாம்.? Reviewed by Vaigai Tamil on October 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.