ஆண் தேவதை - படம் எப்படி இருக்கு தெரியுமா ?


நடிகர்கள்: சமுத்திரகனி, ரம்யா பாண்டியன்

இயக்குனர்: தாமிரா

கதை: 

சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆடம்பரமாக வாழவேண்டும் என்று  ஆசைப்படும் ரம்யா, அதற்கான முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில், ரம்யாவுக்கு ஐடி கம்பெனி ஒன்றில் நல்ல சம்பளத்திற்கு வேலை கிடைக்கிறது. சமுத்திரக்கனி மெடிக்கல் ரெப்பாக வேலை பார்த்துவருக்கிறார். இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை கவனிக்க முடியாமல் போகிறது.

இதற்காக சமுத்திரக்கனி தன்  வேலையை விட்டுட்டு குடும்பத்தை பார்த்துக் கொள்ள ஆரம்பிக்கிறார். ரம்யா தனது பணியில் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து சொந்தமாக வீடு, கார் வாங்கும் அளவிற்கு உயர்கிறார். அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்ல, தனது ஆண் நண்பர்களுடன் பார்ட்டிக்கு செல்ல தொடங்குகிறார்.



ஆடம்பர வாழ்க்கையின் உச்சகட்டமாக ஒருநாள் பார்ட்டிக்கு சென்று மது அருந்திவிட்டு வரும் ரம்யாவுக்கும், சமுத்திரக்கனிக்கும் இடையே கடுமையாக சண்டை வருகிறது. இதனால் சமுத்திரக்கனி வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார், அவருடன் அவரது மகள் பேபி மோனிகாவும் உடன் செல்கிறாள்.

இறுதியாக சமுத்திரக்கனி- ரம்யா பாண்டியன் இருவரும் இணைந்தார்களா? அவர்களது குடும்பம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள் நடிப்பு :

சமுத்திரக்கனிக்கு எந்த வேடம் கொடுத்தாலும் அந்த கதாப்பாத்திரமாகவே மாறிவிடுகிறார். மனைவியிடம் பொறுமை, குழந்தைகளிடம் கனிவு என்று வழக்கம் போலவே தனது பொறுப்பான நடிப்பால்  கதாபாத்திரத்துக்கு வலுசேர்க்கிறார். ரம்யா பாண்டியனுக்கு சற்று எதிர்மறை எண்ணங்கள் கொண்ட கதாபாத்திரம். சராசரி பெண்களின் மனநிலையை பிரதிபலிக்கிறார்.

அபிஷேக், சுஜா,ராதாரவி, காளி வெங்கட், ஹரிஷ் பெரடி, அறந்தாங்கி நிஷா, அனுபமா குமார் அனைவருக்குமே பொருத்தமான கதாபாத்திரங்கள். குழந்தை நட்சத்திரங்கள் மோனிகா, கவின் இருவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

படத்தை பற்றி என் கருத்து:

இன்றய மாறிவரும் சமூகத்திற்கு சமூகத்துக்கு தேவையான கருத்தை மையமாக வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் தாமிரா. தற்போதைய காலகட்டத்தில் கணவன், மனைவிக்குள் நடக்கும் சண்டையால் சிலர் தற்கொலை முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பாடமாக இந்த படம் இருக்கும். ஆடம்பரத்துக்குள் மாட்டிக்கொள்ளாமல், சாதாரண வாழ்க்கையையே மகிழ்ச்சியுடன் வாழுங்கள் என்று மக்களுக்கு சொல்ல  வருகிறார் இயக்குநர்.


திரைக்கதையில் எந்த புதுமையும் இல்லாததால் எளிதில் காட்சிகளை கணிக்கலாம் இது பலவீனம். மனைவியை வேலைக்கு அனுப்பிவிட்டு குடும்பத்தை கவனிக்கும் கணவன் என்ற சுவாரசியமான ஒருவரிக் கதைக்கு இன்னும் சுவாரசியமான திரைக்கதை அமைத்து இருந்தால் ஆண் தேவதையை இன்னும் ரசித்து  இருக்கலாம். குடும்ப வாழ்க்கையின் அவசியத்தை உணர்த்தியதற்காக ஆண் தேவதையை பாராட்டலாம்.

ஜிப்ரானின் இசைஅமைப்பும், விஜய் மில்டனின் ஒளிப்பதிவும் படத்தை ரசிக்க வைத்திருக்கிறது.

மொத்தத்தில் `ஆண் தேவதை' அனைவரும் பார்க்க வேண்டிய தேவதை,

நன்றி மக்களே..

#AanDevathaiReview, #Samuthirakani
ஆண் தேவதை - படம் எப்படி இருக்கு தெரியுமா ? ஆண் தேவதை - படம் எப்படி இருக்கு தெரியுமா ? Reviewed by Vaigai Tamil on October 13, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.