பரியேறும் பெருமாள் விமர்சனம்




முக்கிய நடிகர்கள் : 

        கதிர், 'கயல்'ஆனந்தி, யோகி  பாபு, மாரிமுத்து,விஜீஷ்,சண்முகராஜன்,

இயக்குனர் : 

        மாரி செல்வராஜ்


திரைக்கதை :

திருநெல்வேலிக்கு அருகில் உள்ள புளியங்குளம்  கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் கதிர் . டாக்டர் அம்பேத்கர் போல் ஆக வேண்டும் எனும் லட்சியத்துடன் சட்டம் படிப்பதற்காக சட்டக் கல்லூரியில் சேர்க்கிறார். ஆனால், ஆங்கில அறிவு அறவே இல்லாத காரணத்தால் .,கல்லூரி பேராசிரியர் ஒருவராலேயே 'கோட்டா'வில் வந்தவன் என்று அவமானப்படுத்தப்படுகிறார். தனக்கு நேரும் அவமானங்களையும் மீறி ,உடன் படிக்கும் நாயகி ஆனந்தியின் உதவி மற்றும்  யோகி பாபுவின் நல்ல நட்பு ... ஆகியவற்றுடன் படிப்பை முடிக்க ஆசைப்படுகிறார் கதிர். 


கதிரின் அப்பாவித்தனத்தைப் பார்த்து நட்பாகப் பழக ஆரம்பிக்கிறார் ஆனந்தி . இருவருக்குமான நட்பு நெருக்கமாகிறது. ஆனந்தியின் மனதில் காதல் அரும்புகிறது. ஆனால், தன்னாலும் , தன் ஜாதியாலும் அவருக்கு எந்தப் பிரச்சினையும் வரக் கூடாதென கதிர் ஒதுங்கியே இருக்கிறார். நாயகி ஆனந்தியின் வற்புறுத்தலால், அவரது .வீட்டில் நடக்கும் ஒரு திருமணத்திற்குச் செல்லும் கதிர் அங்கு ஆனந்தியின் ஜா'தீய' உறவுகளால் ஆனந்திக்கு தெரியாமல் ., அடித்து , உதைக்கப்பட்டு முகத்தில் சிறுநீர் கழிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு விரட்டி யடிக்கப்படுகிறார். பின்னர் கதிரை கொலை செய்யவும் திட்டம் தீட்டுகிறார்கள். அவற்றையெல்லாம் எதிர்கொண்டு கதிர் சட்டப் படிப்பை படித்து முடித்தாரா? இல்லையா ? யோகிபாபு  நட்பு என்னவாயிற்று ?ஆனந்தியின் காதல் என்னவாயிற்று ?என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு நெல்லை சீமையின் கிராமிய மணமும் ஜாதீய குணம் கமழ விடை சொல்கிறது "பரியேறும் பெருமாள் "படத்தின் மீதிக் கதை .

நடிகர்கள் பற்றி:

   கதிர் :         பரியேறும் பெருமாள் ஆக கதிர். எந்த ஒரு காட்சியிலும் அவரைக் கதிராக ரசிகர்களால் பார்க்கவே முடியவில்லை. படம் முழுவதும்  பரியேறும் பெருமாள் எனும் பாத்திரமாகவே தெரிகிறார். சட்ட கல்லூரிிக்கு படிக்க வந்த பின்னும், ஆங்கிலஅறிவு சுத்தமாக இல்லாத அப்பாவித்தனத்துடன் கூடிய கிராாமத்து மாணவனாக நிறைய கோபதாபம், நாயகி ஆனந்தியுடன் 'இனம் ' புரியா நட்பு, யோகி பாபுவுடனான கடைசி பென்ச் கூட்டாளி எனும் பாசம்... ஆகியவற்றுடன் கூடிய அவருடையயதார்த்தமான நடிப்பு ஒவ்வொரு காட்சியிலும் உயிர்ப்பாய் அமைந்துள்ளது. 

ஏற்கனவே இரண்டு  படங்களில் கதாநாயகனாக  நடித்திருந்தாாலும் இந்த பரியேறும் பெருமாள் படம் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கான சரியான படி ஏறியிருக்கிறார் கதிர் என்று சொன்னாலும்  மிகைையல்ல! 


யோகிபாபு நான் சாதி பார்த்தா உன்னுடன் பழகுகிறேன்? என நட்பிற்கு. இலக்கணமாகப் பேசி நெகிழ வைக்கிறார். ஆனால். அவர் , நாயகர்.கதிரைக்காட்டிலும் உயர்ந்த  ஜாதி என்பதை ரசிகர்கள் நம்புவது சற்றே கடினம். மற்றபடி அவ்வப்போது சின்னச் சின்ன நகைச்சுவைகளை உதிர்த்து அவருடைய கதாபாத்திரத்தை ரசிக்க , சிரிக்க.வைக்கிறார் யோகி பாபு. 

ஆனந்தி : " கயல்"ஆனந்தி ஜோ என்கிற ஜோதி மகாலட்சுமி, எனும் பாத்திரத்தில்  கல்லூரியில் படிக்கும் ஒவ்வொருவருக்கும் இப்படி ஒரு தோழி கிடைக்க மாட்டாரா ? என்று ஏங்க வைக்கிறார். கல்லூரிப் படிப்பை முடித்தவர்கள் கூட நமக்கெல்லாம் இப்படி ஒரு தோழி கிடைக்காமல் போய்விட்டாரே ? என்று நிச்சயம் வருத்தப்படுவார்கள். 

கள்ளம் கபடமில்லாத சிரிப்பு, சக மாணவனிிடம்உண்மையான நேசம், பாசம் என சித்தரிக்கப் பட்டிருக்கும் அவர் கதாபாத்திரத்தின் மீதே படம் பார்க்கும் ரசிகர்களுக்கு தனி மரியாதை வந்துவிடுகிறது.



படத்தை பற்றி என் கருத்து :

மண் சார்ந்த மக்களின் வாழ்வியல் சார்ந்த படங்கள் கடந்த சில வருடங்களாக வராமல் இருந்தன.கிராமிய மணம் வீசும் படங்களைப் பார்ப்பதே அரிதாகிப் போனது. ஆனால்,அந்த குறையை போக்கும் வகையில் இந்தப் படம் வெளிவந்திருப்பது சிறப்பு .

இயக்குனர் மாரி செல்வராஜ் படத்தில் இடம் பெற்றுள்ள, புளியங்குளம் கிராமத்திற்குள் நம்மையும் அழைத்து சென்று விட்டார் என்று சொல்லும் அளவிற்கு படத்துடன் நம்மை ஒன்ற வைத்துள்ளார். ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு கதை இருக்கிறது, இந்தக் கதை இயக்குனர் மாரி செல்வராஜ் பார்த்து, அனுபவித்த சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது என்றே கூறலாம் .

ஒரு திரைப்படத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வைவிட, என்றோ வாழ்க்கையில் படித்து முன்னேறத் துடித்த ஒரு இளைஞனுக்கு நேர்ந்த சில வன்கொடுமைகளை நேரில் பார்க்கிறோமோ? என்று சொல்லுமளவிற்கு இப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். 

மேலும் ,மாரி செல்வராஜின் எழுத்து , இயக்கத்தில் இந்த காலத்தில் இப்படி ஒரு ஜாதீய அடையாளங்கள் நிரம்பிய திரைப்படம் தேவையா ? எனும் கேள்விகள் ஒரு பக்கம், இப்படம் பார்க்கும் பலருக்கும் எழும்பி நின்றாலும் ., இப்படம் பார்த்துவிட்டு வெளியில் வந்த பின்னும் இந்த 'பரியேறும் பெருமாள்' படத்தின் பாதிப்பு நம்முள் இருக்கும். இதுவே இப்படத்திற்கு கிடைத்த பெரும் வெற்றி என்றே கூறலாம்.

கடைசியாக  "பரியேறும் பெருமாள்  'பலராலும் கொண்டாடப்படுவான்! பல பதக்கங்களும்  பெறுவான்! பார்க்க வேண்டிய படம் .

நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்..




பரியேறும் பெருமாள் விமர்சனம் பரியேறும் பெருமாள் விமர்சனம் Reviewed by Vaigai Tamil on October 03, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.