வட சென்னை ஒரு வார வசூல் எத்தனை கோடி தெரியுமா ?


நடிகர் தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் ஆடுகளம், பொல்லாதவன் போன்ற மெகா ஹிட் வெற்றியை தொடர்ந்து 3-வது முறையாக #வடசென்னை படத்தில் இணைந்தனர்.  3 பாகங்களாக வரவிருக்கும் இந்த படத்தின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

#வடசென்னை படத்தில், தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, இயக்குனர்கள் அமீர், சமுத்திரகனி, நடிகர்கள் கிஷோர், ராதாரவி என பெரிய நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது.



அவர்கள் எதிர்ப்பார்த்தது போலவே படமும் சிறப்பாக அமைந்ததால், படத்திற்கு வசூல் மழை தான்.

படத்திற்கு A சான்றிதழ் கொடுத்திருந்தாலும் படத்தின் வசூலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை, இந்நிலையில் வட சென்னை உலகம் முழுவதும் தற்போது வரை ரூ 45 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.

மேலும் தீபாவளி வரை பெரிய நடிகர்கள் படங்கள் எதுவும் திரைக்கு வராததால், ரூ 70 கோடிகளுக்கு மேல் இப்படம் #வசூல் செய்யும் என நம்ப படுகிறது.

நல்ல படம் . நல்ல வசூல் தான்..

நன்றி மக்களே..

Vadachennai,actor dhanush,


வட சென்னை ஒரு வார வசூல் எத்தனை கோடி தெரியுமா ? வட சென்னை ஒரு வார வசூல் எத்தனை கோடி தெரியுமா ? Reviewed by Vaigai Tamil on October 24, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.