ஜீனியஸ் படம் எப்படி இருக்கு தெரியுமா?


இயக்குனர் சுசீந்திரன் ,ரோஷன், ப்ரியா லால் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் #ஜீனியஸ். வெண்ணிலா கபடி குழு , நான் மகான் அல்ல போன்ற படங்களை இயக்கியுள்ளார். படத்தை தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்துள்ளார் புதுமுகம் ரோஷன். ப்ரியாலால் என்ற கேரளா பெண் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகியுள்ளார். ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, ஜெயபாலன் உள்ளிட்டோரும் சில முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா  இசையமைத்துள்ளார்.


கதை:
படிப்புக்காக தனது புத்திசாலி மகன் ரோஷனை பிழிந்தெடுக்கும் தந்தையாக நரேன். அதை தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டு
நோயாளியாகிறார் ரோஷன். அவரை திருப்பி பழைய நிலைக்கு கொண்டு வர அவரது குடும்பம் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற்றதா இல்லையா என்பதே படத்தின் மீதி கதை. 


மதிப்பெண்களை நோக்கி மட்டுமே செல்லும் தற்போதய கல்வி முறை,ஊழியர்களை மூச்சுமுட்ட வேலைவாங்கும் ஐடி நிறுவனங்கள்,மாடர்ன் தமிழ் கலாச்சாரம் என பல விஷயங்களை படம் தெளிவாக காட்டுகிறது. படிப்பு ,வேலை மட்டுமே வாழ்க்கை அல்ல.அதை தவிர கலை, விளையாட்டு என வாழ்க்கையை சந்தோஷமாக வாழ வேண்டும், என்ற நல்ல தகவலை கொண்டுள்ளது. 



படம் பற்றி என் கருத்து:

படம் துவங்கும் முதல் காட்சியே, ஈர்ப்பில்லாத வசனங்கள், சில ஒர்க்அவுட் ஆகாத காமெடிசீன் ரசிகர்களை டென்ஷன் ஆக்கும். முதல் 20 நிமிடங்களுக்கு படம் இப்படியே செல்கிறது. அதன்பின், பிளேஷ்பேக் காட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக கதையை நகர்த்துகின்றன. முதல் பாதி முடியும் போது,  படம் எங்கு செல்கிறது என்று நம்மால் கணிக்க முடிவதனால், பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. இரண்டாவது பாதி, கொஞ்சம் வேகமாக நகர்கிறது. ப்ரியா லால் கேரக்டர் படத்திற்கு பலம் சேர்க்கிறது. க்ளைமேக்ஸும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சிறப்பில்லை. 
நல்ல கதைதானே. படத்தில் சொல்வதற்கு விஷயம் எதுவுமில்லை. சில காட்சிகள் தேவேயில்லாமல் இழுத்தடிக்கப்படுவது போல தோன்றுகிறது. வெறும் 1.39 மணி நேரத்தில் படம் முடிந்தது தான் மிகப்பெரிய ப்ளஸ்.
படத்தின் ஹீரோ ரோஷன். பரீட்சையமில்லாத முகம் என்றாலும், இந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருக்கிறார். ஆனால், நடிப்பில் அவரது அனுபவமின்மை பல காட்சிகளில் பளிச்சென தெரிகிறது. எமோஷனலாகவும், சீரியஸாகவும் நடிக்கும் காட்சிகளில் ரோஷன் கஷ்டப்படுகிறார். 

ப்ரியா லாலின் நடிப்பு சிறப்பு. ஆனால், படத்தில் மீண்டும் ஸ்கோர் செய்வது ரோஷனின் தந்தை, தாயாக நடித்திருக்கும் நரேன் மற்றும் மீரா கிருஷ்ணன், ரொம்பவே சூப்பரான பெர்பார்மன்ஸை இருவரும் கொடுத்துள்ளார்கள். படத்திற்கு மிகப்பெரிய பலம். 
படத்தின் தூணாக நிற்பது யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை. 

நல்ல கருத்தை சொல்ல வந்த படம், ரொம்பவும் பார்த்து பழகிப்போன காட்சிகள், வசனங்கள், துடிப்பில்லாத திரைக்கதை ஆகியவற்றால் பின்தங்கியுள்ளது.

ரொம்பவே சராசரியான ஒரு அனுபவத்தை கொடுக்கிறது  #ஜீனியஸ்.
ஜீனியஸ் படம் எப்படி இருக்கு தெரியுமா? ஜீனியஸ் படம் எப்படி இருக்கு தெரியுமா? Reviewed by Vaigai Tamil on October 27, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.