வட சென்னை - படம் எப்படி இருக்கு தெரியுமா !


வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியின் பல வருட உழைப்பில் தயாராகி இன்று வெளியாகி இருக்கிறது வட சென்னை திரைப்படம்.

கதை:

நடிகர் செந்தில் {கிஷோர்} குணா{சமுத்திரக்கனி }இருவரும் படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு கொலையை செய்கின்றனர். அந்த கொலையில் இருந்தே பல அரசியல் பிறக்கின்றது.

அதன் பின் செந்தில், குணா இருவரும் பிரிந்து தங்களுக்கென்று ஒரு கேங்கை உருவாக்கி ஒருவரை ஒருவர் கொலை செய்ய துடிக்கின்றனர்.


அதே நேரத்தில் ஹீரோ தனுஷ் {அன்பு }கேரம் ப்ளேயராக வரவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்க இந்த கேங் வாருக்குள் யதார்த்தமாக உள்ளே வர அதை தொடர்ந்து யார் கொடி வடசென்னையில் பறக்கின்றது, ஆரம்பத்தில் செந்தில் குணா யாரை கொலை செய்தார்கள், தனுஷ் தன்னை சூழ்ந்த பிரச்சனைகளை எப்படி தீர்க்கின்றார் என்பதே இந்த வடசென்னை.

நடிகர்கள் பற்றி:

படத்தின் ஒவ்வொரு நடிகர்களும் இயற்கையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். தனுஷ் படத்திற்கு படம் தன்னை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்கின்றார். 18 வயதில் ஆரம்பித்து 30 வயதை தாண்டி அவருக்கான கதாபாத்திரத்தில் அருமையா  வாழ்ந்து உள்ளார்.

படத்தை பற்றி என் கருத்து:

வடசென்னை என்றாலே அடிதடி வெட்டுக்குத்து என்பது மட்டுமே மக்களுக்கு தெரியும், இதிலும் அதே தான் என்றாலும் இந்த அரசியல்வாதிகள் தான் அவர்களை எப்படி அடிமைகள் போல் பயன்படுத்தி தங்கள் அரசியலுக்காக வளரவிடாமல், பாடப்புத்தகத்தை கையில் கொடுக்காமல் கெட்டவர்களாக வளர்த்து விடுகின்றனர் என்பதை தோலுரித்து காட்டியுள்ளது.


படத்தின் ஆரம்பத்தில் வரும் ஜெயில் காட்சிகள்,  செந்தில் செய்யும் ராஜ்ஜியம், எப்படி போதை மருந்து கை மாறுகின்றது, உட்கார்ந்த இடத்தில் இருந்து லட்சம் லட்சமாக சம்பாதிக்கின்றனர் என்பதை வெற்றிமாறன் காட்டியவிதம் அவரின் இயக்கத்தை பிரமிக்க வைக்கிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டதில் ஒரு கலவரம் நடக்கின்றது, அதில் மக்களின் மனநிலை என்ன, அதை தொடர்ந்து சில வருடங்கள் கழித்து எம்.ஜி.ஆர் இறப்பு, அதில் நடக்கும் அரசியல், சாலை அமைக்கின்றேன் என்று குடிசை மக்களை விரட்டுவது, அதற்கு தற்போதுள்ள ஆளங்கட்சியையே படத்தில் காட்டிய விதம் என இயக்குனர் வெற்றிமாறனுக்கு அதிக தைரியம் தான்.

அதேபோல் படக்குழுவினர்கள் சென்ஸார் போர்டிற்கு தான் முழு நன்றியை சொல்ல வேண்டும், நாம் நடைமுறையில் பேசும் அத்தனை கெட்ட வார்த்தையும் படத்தில் பீப் இல்லாமல் கொடுத்து இருப்பது கதைக்கு அது அவ்வளவு தேவை என்பதால் ஏ சான்றிதழுடன் வெளியிட்டது நல்ல முடிவு.

படத்தின் பல கதாபாத்திரங்கள் வந்து சென்றாலும் அன்புவிற்கு பிறகு நம்மை ரசிக்க வைப்பது ராஜன் அமீர் கதாபாத்திரம் தான், 30 நிமிடம் வந்தாலும் அன்புவின் முழு வீச்சுக்கு இன்ஸ்பிரேஷனாக ராஜனை வடிவமைத்தது சூப்பர். ஆண்ட்ரியா கடைசி நேரத்தில் மிரட்டுகிறார். இரண்டாம் பாதியில் இவர் தான் ஹீரோ என்பது போல் முடிகின்றது.

சந்தோஷ் நாராயணன் இசை சிறப்பாக உள்ளது. பின்னணி இசையால் ஒரு அச்சத்தை ஏற்படுத்திக்கிறார்.

நடிகர் நடிகைகள் பங்களிப்பு, ஒரு சீன் என்றாலும் பலரும் ஸ்கோர் செய்கின்றனர்.

மொத்தத்தில் வடசென்னை படம் என்பதை விட தமிழ் சினிமாவின் முக்கிய பதிவு.

மக்களின் வாழ்க்கை முறையை யதார்த்தமாக காட்டிய விதம் சிறப்பு.

நன்றி மக்களே..

#vadachennai,#vadachennai movie review

வட சென்னை - படம் எப்படி இருக்கு தெரியுமா ! வட சென்னை - படம் எப்படி இருக்கு தெரியுமா ! Reviewed by Vaigai Tamil on October 17, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.