ட்ரெண்ட் ஆன 96 மஞ்ச சுடிதார் -- இந்த தீபாவளி ஸ்பெஷல்


96  படத்தில் நடித்த த்ரிஷாவால் இளம் பெண்கள் மீண்டும் துப்பட்டா போட  ஆரம்பித்துள்ளனர்.

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா  நடித்த 96 படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. கணவன்மார்கள் தங்கள் பள்ளி காலத்து காதலை நினைத்து ஃபீல் பண்ண மனைவியை விட்டுவிட்டு தனியாக சென்று படம் பார்க்கிறார்கள். 96 படம் ஓடும் தியேட்டர்களில் இன்னும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

மஞ்ச சுடிதார்:


96 படத்தில் த்ரிஷா அணிந்திருந்த அந்த மஞ்சள் கலர் டாப் மிகவும் பிரபலமாகி வருகிறது. இதை புரிந்து கொண்ட துணிக்கடைக்காரர்கள் ஜானு டிரஸ் என்று கூறி அந்த மஞ்சள் கலர் டாப் மற்றும் துப்பட்டாவை விற்பனை செய்து வருகின்றனர். வரும் தீபாவளிக்கு பலரும் ஜானு கெட்டப்பில் சுற்றினால் ஆச்சரியப்பட தேவை இல்லை.

ஜானு தான் அணிந்திருந்த உடை போன்று விற்பனைக்கு வந்திருப்பதை பார்த்து த்ரிஷா மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஜெசி கதாபாத்திரத்தை அடுத்து 96 படத்தில் த்ரிஷாவுக்கு ஜானு கதாபாத்திரம் கை கொடுத்துள்ளது.



அதுமட்டுமில்லாமல் அமேசானில் ஜானு, ராம் பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளது. இது திரிஷாவிற்கு கிடைத்த மிக பெரிய பரிசு.

நன்றி மக்களே..

#96trisha,#96 movie trisha dress,96 movie jaanu dress, 96 movie jaanu dress trending in tamilnadu
ட்ரெண்ட் ஆன 96 மஞ்ச சுடிதார் -- இந்த தீபாவளி ஸ்பெஷல் ட்ரெண்ட் ஆன 96 மஞ்ச சுடிதார் -- இந்த தீபாவளி ஸ்பெஷல் Reviewed by Vaigai Tamil on October 18, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.