சிவகார்த்திகேயன் மகள் செய்த சாதனை : 5 கோடி


பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள "கனா" படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை சிவகார்த்திகேயன் தனது மகள் ஆராதனா மற்றும் பிரபல பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மியுடன் இணைந்து பாடியுள்ளார்.இந்த பாடலின் துள்ளல் இசையும், சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா கொடுத்த கியூட்டான ரியாக்ஷன்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


தற்போது  இந்த பாடல் யூடியூபில் வெளியான ஒரே மாதத்தில் இதுவரை 5 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை புரிந்துள்ளது.

இதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது,

தந்தை, மகள் உறவை சொல்லும் இந்த பாடல் என் மகள் ஆராதனாவுடன் எனக்கு இருக்கும் உறவை காலம் முழுக்க நினைக்க வைத்துள்ளது. இப்போது யூ-டியூபில் 50 மில்லியனை தாண்டியிருப்பதும்,மக்களுக்கு  பிடித்தமான பாடலாக இருப்பதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.


அதுமட்டுமின்றி பாடலை பாடிய வைக்கம் விஜயலட்சுமி அவர்களுக்கு நன்றி. ஆராதனாவின் அழகிய குரல் இந்த பாடலின் இனிமைக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது என்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, என்னையும், என் மகள் ஆராதனாவையும்  ஒரே பாடலில் இணைத்த இயக்குனர் அருண்ராஜா காமராஜாவுக்கு நன்றி என சிவா கூறியுள்ளார்.

#vaayaadi petha pulla, sivakarthikeyanaarathana ,siva sivakarthik daughter aarathana song,

சிவகார்த்திகேயன் மகள் செய்த சாதனை : 5 கோடி சிவகார்த்திகேயன் மகள் செய்த சாதனை : 5 கோடி Reviewed by Vaigai Tamil on October 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.