தல அஜித்தின் செல்போன் விலை என்ன தெரியுமா ?



தல அஜித்தை பிடிக்காதவர்கள்  யாருமே இருக்கமுடியாது. அவரை பொதுமக்கள் மட்டுமல்ல சினிமாதுறையில் உள்ளவர்களுக்கும் மிகவும் பிடிக்கிறது. சினிமா மட்டுமல்ல மற்ற விசயங்களிலும் அஜித்தை அனைவருக்கும் பிடிக்கும் என்ற நிலை உருவாகிவிட்டது.




அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள். இப்படத்தில் திருச்சி ரமேஷ் என்பவரும் அஜித்துடன் நடித்துள்ளார். அண்மைகாலமாக இவர் சமூகவலைதளங்களில் டப்ஸ் மாஷ் செய்து, ஆடிப்பாடி கலக்கி வருகிறார்.


சமீபத்தில் ரமேஷ் அளித்த பேட்டி ஒன்றில், ‘‘அஜித் மிக சிறந்த மனிதர் என்றும் எல்லோரிடமும் அன்பாக பேசக்கூடியவர் . நல்ல பொறுமைசாலி என்றும் கூறியுள்ளார். இதில் முக்கியமான செய்தி என்னவென்றால் அவர் தினமும் பயன்படுத்தும் செல்போன் வெறும் ரூ. 1500 மதிப்புள்ள ஜியோ போன்’’ என்றார் ரமேஷ்.

நன்றி மக்களே..

தல அஜித்தின் செல்போன் விலை என்ன தெரியுமா ? தல அஜித்தின் செல்போன் விலை என்ன தெரியுமா ? Reviewed by Vaigai Tamil on October 15, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.