வீடியோ வினையா போச்சே - நடிகை காஜல் அகர்வால் அழுகை


நடிகை காஜல் அகர்வால் சில தினங்களுக்கு முன்பு முன்னர் மலைப்பாம்பு ஒன்றை கழுத்தில் போட்டு அதை வீடியோவாக வெளியிட்டிருந்தார். ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சிகுள்ளாகிய இந்த வீடியோ, விலங்கு நல வாரியத்தையும் அதிர்ச்சி அடைய செய்தது.


பிரபலங்கள் இது போன்று விலங்குகள் துன்புறுத்தப்படுவதை ஊக்குவிக்கலாமா? உங்களை பார்த்த உங்கள் ரசிகர்களும் அவ்வாறு செய்வார்கள் அல்லவா? என கேள்வி மேல் கேள்விகளை கேட்டு காஜலை ஒரு வழியாக்கியுள்ளனர் விலங்கு நல வாரிய அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.

இதனால் அதிர்ச்சி ஆன காஜல் இந்த பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பது என்று ஆலோசித்து வருகிறார். இது போன்று இதற்கு முன்னர் திரிஷா டால்பின் ஒன்றுக்கு முத்தம் கொடுத்திருந்த விஷயத்தில்  சிக்கியிருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே..

நன்றி மக்களே...

#kajalagarwal,
வீடியோ வினையா போச்சே - நடிகை காஜல் அகர்வால் அழுகை வீடியோ வினையா போச்சே - நடிகை காஜல் அகர்வால் அழுகை Reviewed by Vaigai Tamil on October 09, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.